காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 20ம் தேதி சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கம்


காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே  20ம் தேதி சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கம்
x

12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 20ம் தேதி தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

20ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

1 More update

Next Story