நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில்

காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில் செப்டம்பர் மாதம் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில்
Published on

திருச்சி,

இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப் பட உள்ளது. இந்த ரெயில் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 9 நாட்கள் காசி தீர்த்தா யாத்ரா என்ற பெயரில் சுற்றுலா ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக் கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வழியாக செல்கிறது.

இதில் புத்தகயா-மகாபோதி மற்றும் கயா விஷ்ணு பாதம் கோவில், வாரணாசி காசி விசுவநாதர், அன்னபூரணி விசாலாட்சி கோவில், காலபைரவர் கோவில், அயோத்தி ராமர் கோவில், பிரயாக்ராஜ்-திருவேணி சங்கமம் மற்றும் அனுமன் கோவில் ஆகிய இடங்களை பார் வையிடலாம். இதில் ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத தங்குமிடம், சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து செலவு, தென்னிந்திய உணவு, மற்றும் சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு நபருக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய ரூ.16 ஆயிரத்து 900-ம், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்ய ரூ. 31 ஆயிரமும், 2-ம் வகுப்பு ஏ.சி. பெட் டியில் பயணம் செய்ய ரூ.43 ஆயிரத்து 500-ம் டிக்கெட் கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது. மேற்கண்ட ரெயில் பயணங்களில் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் நிறுவன விதிமுறைகளின் படி, எல்.டி.சி. வசதியை பெறலாம். மேலும் தகவல்களுக்கு 8287932070 என்ற எண்ணிலும், www.irctctorurism.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. தெற்கு மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com