சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் அறிவிப்பு

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரெயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06072) அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 22 ஆம் தேதி (நாளை) பிற்பகல் 01.25 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இரவு 07.35 மணிக்கு வந்து சேரும்.

திருச்சியில் இருந்து 07.45 மணிக்கு கிளம்பும் ரெயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சத்தூர், கோவில் பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு 23 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது. வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரெயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com