பெங்களூரு - தென்காசி இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கோடைகாலத்தை முன்னிட்டு, கூடுதலாக ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு கன்டோன்மென்ட் - தென்காசி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து வரும் 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06513) மறுநாள் மதியம் 1 மணிக்கு தென்காசி ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து வரும் 25-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06514) மறுநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரெயில், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (22-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com