சென்னை எழும்பூர்-தென்காசி இடையே சிறப்பு ரெயில்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வார இறுதி நாளான நாளை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே
தெற்கு ரெயில்வே
Published on: 

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்-தென்காசி இடையே ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்(வ.எண்.06015), சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தென்காசி சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வார இறுதி நாளான நாளை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X