

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஹோலி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர்- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது
அதன் விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஜெய்சால்மர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06005), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் அதிகாலை 4.45 மணிக்கு ஜெய்சல்மேர் சென்றடையும். மறுமார்க்கமாக, ஜெய்சால்மரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06006), புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 5 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.