

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 11.40 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06070) இயக்கப்படுகிறது. அதேபோல, எழும்பூரில் இருந்து வருகிற 10-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரெயில் (06069) இயக்கப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 13-ந்தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06151) இயக்கப்படுகிறது. அதேபோல, தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வருகிற 14-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06152) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.