

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 25-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06063) மறுநாள் காலை 10.55 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து ஜூன் 28-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06064) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.