சென்னை எழும்பூர்- திருச்சி இடையே இன்று சிறப்பு ரெயில்

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ராமேஸ்வரம் - சென்னை சிறப்பு ரெயில்
Published on: 

திருச்சி,

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06196 சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 11.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும். இந்த ரெயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம். கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம். செங்கல்பட்டு. தாம்பரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com