சென்னை-கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரெயில்

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள் நள்ளிரவு 11.25 மணிக்கு எழும்பூர் நோக்கி ரெயில் புறப்படுகிறது.
சென்னை-கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரெயில்
Published on

திருச்சி,

சென்னை-கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

தென்னக ரெயில்வே பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை-கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்- 06043) மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.35 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் 5.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள் நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் (எண்-06044) மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.40 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com