

சென்னை,
பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மங்களூருவில் இருந்து வருகிற 20-ந்தேதி எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06126) இயக்கப்படுகிறது. அதே போல, எழும்பூரில் இருந்து வருகிற 21-ந்தேதி மங்களூருக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.