

சேலம்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்- போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06023) வருகிற 6-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 5.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் போத்தனூர்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06024) வருகிற 9-ந் தேதி இரவு 9.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 2.02 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.