காக்கிநாடா - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

விஜயவாடா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்
காக்கிநாடா - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு காக்கிநாடா டவுன் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென் மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காக்கிநாடா டவுனில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07617) மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 16-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07618) அதே நாள் இரவு 8.30 மணிக்கு காக்கிநாடா டவுனை சென்றடைகிறது.

இந்த ரெயில் வேலூர், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (6-2-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com