திருப்பூர் வழியாக கோட்டயம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்


திருப்பூர் வழியாக கோட்டயம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்
x

கோட்டயம் - பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

திருப்பூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக கோட்டயம் - பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. கோட்டயம்-பெங்களூரு (வண்டி எண்.06147) சிறப்பு ரெயில் கோட்டயத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும்.

பெங்களூரு-கோட்டயம் (06148) சிறப்பு ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். மேற்கண்ட தகவலை தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story