

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06164), மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06163), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும்.
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரெயில் (06144), மறுநாள் காலை 9.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.