போத்தனூர்- அசாம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
போத்தனூர்- அசாம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
Published on: 

சேலம்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், போத்தனூர் மற்றும் அசாம் மாநிலம் நியூ தின்சுகியா நகரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

போத்தனூர்-நியூ தின்சுகியா

அதன்படி, போத்தனூர்-நியூ தின்சுகியா சிறப்பு ரெயில் (06101) வருகிற 5 மற்றும் 13-ந் தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 7 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

இங்கிருந்து 7.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, ராஜ முந்திரி வழியாக வருகிற 8 மற்றும் 16-ந் தேதிகளில் காலை 4.30 மணிக்கு நியூ தின்சுகியா ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் நியூ தின்சுகியா- போத்தனூர் சிறப்பு ரெயில் (06102) வருகிற 8 மற்றும் 16-ந் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வருகிற 11 மற்றும் 19-ந் தேதிகளில் இரவு 7.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு,திருப்பூர் வழியாக இரவு 11 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X