திருப்பூர் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில்

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருப்பூர் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில்
Published on

திருப்பூர்,

கோடை விடுமுறையில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. போத்தனூர்-பரவுனி (வண்டி எண்.06021) சிறப்பு ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை (3 சேவைகள்) திங்கட்கிழமைகளில் போத்தனூரில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பரவுனி சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமைகளில் அதிகாலை 5.23 மணிக்கு வந்து 5.25 மணிக்கு புறப்படும்.

பரவுனி-போத்தனூர் (06022) சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை (3 சேவைகள்) பரவுனியில் இருந்து வியாழக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் இரவு 8.43 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்படும்.

மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com