

திருப்பூர்,
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, போத்த னூர்-பரவுனி (வண்டி எண்.06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை (5 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனியை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு காலை 7.08 மணிக்கு வந்து 7.13 மணிக்கு புறப்படும். பரவுனி-போத்தனூர் (06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை (5 சேவைகள்) புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.