

திருப்பூர்,
தீபாவளியை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு-நிஜாமுதீன் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-நிஜாமுதீன் (வண்டி எண்.06073) சிறப்பு ரெயில் வருகிற 2, 9 மற்றும் 16-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு நிஜாமுதீன் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும்.
நிஜாமுதீன்-திருவனந்தபுரம் வடக்கு (06074) சிறப்பு ரெயில் வருகிற 5. 12 மற்றும் 19-ந்தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) நிஜாமுதீனில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு வந்து 6.15 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.