விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க விசாகப்பட்டிணம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, விசாகப்பட்டிணத்தில் இருந்து வருகிற 22 மற்றம் 29 ஆகிய தேதிகளில் எஸ்.எம்.வி.டி.பெங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-08581) இயக்கப்படுகிறது.

அதே போல, எஸ்.எம்.வி.டி.பெங்களூருவில் இருந்து வருகிற 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டிணத்திற்கும் சிறப்பு ரெயில் (08582) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com