

மதுரை,
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06115) திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத் தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06116) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந் 1 தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டிருக்கும். ரெயில், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.