தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை, 

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புவனேஸ்வரில் இருந்து 14 , 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com