காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 4 Nov 2025 1:00 AM IST (Updated: 4 Nov 2025 1:00 AM IST)
t-max-icont-min-icon

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மைசூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06243), மறுநாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.

மறுமார்க்கமாக, காரைக்குடியில் இருந்து வருகிற 9-ந்தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் சிறப்பு ரெயில் (06244), மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story