

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை சென்ட்ரல்- சந்திரகாச்சி (வண்டி எண்: 06077/06078)
சென்னை சென்ட்ரலில் இருந்து சந்திரகாச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06077), வருகிற ஏப்ரல் 4 முதல் ஜூன் 6 வரை (சனிக்கிழமைகளில்) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாளில் காலை 6.45 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06078) வருகிற ஏப்ரல் 6 முதல் ஜூன் 8 வரை (திங்கட்கிழமைகளில்) சந்திரகாச்சியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
பெட்டி அமைப்பு: ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி - 1, ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி - 3, தூங்கும் வசதி பெட்டி - 16, பொது வகுப்பு பெட்டி - 2
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
திருவனந்தபுரம் - சந்திரகாச்சி (வண்டி எண்: 06081/06082)
திருவனந்தபுரத்தில் இருந்து சந்திரகாச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06081), வருகிற ஏப்ரல் 3 முதல் ஜூன் 5 வரை (வெள்ளிக்கிழமைகளில்) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாளில் மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06082) வருகிற ஏப்ரல் 6 முதல் ஜூன் 8 வரை (திங்கட்கிழமைகளில்) சந்திரகாச்சியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.
பெட்டி அமைப்பு: ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி - 18
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.