

சென்னை,
சென்னை சென்டிரல் - மேற்கு வங்காள மாநில ஹவுரா அருகே உள்ள சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து 22-ந் தேதி, (புதன்கிழமை) காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06005) மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து 23-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06006 ), மூன்றாம் நாள் காலை 9 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயிலில் 13 தூங்கும் வசதி பெட்டிகளும், 2 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும், 1 ஏசி இரண்டு வகுப்பு பெட்டியும், 3 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியும், இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து மேற்கு வங்காளத்தின் கரக்பூர் ரெயில் நிலையத்திற்கும் 20ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட்டுகிறது.இந்த ரெயில் (வண்டி எண் 06003) காலை 10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4 மணிக்கு கரக்பூர் ரெயில் நிலையம் சென்றடியும்.
மறுமார்க்கத்தில், கரக்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும், சிறப்பு ரெயில் (வண்டி எண் 06004) மூன்றாம் நாள் காலை 3 மணிக்கு ஈரோடு வந்து சேரும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.