ஈரோடு - சம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் – ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
Published on

சேலம்,

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் – ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

சம்பல்பூர் – ஈரோடு

அதன்படி, ரெயில் எண் 08311 சம்பல்பூர் – ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில், ஜூலை 1 முதல் ஜூலை 29 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் சம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும்.

ஈரோடு – சம்பல்பூர்

மறுமார்க்கத்தில், ரெயில் எண் 08312 ஈரோடு – சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில், ஜூலை 3 முதல் ஜூலை 31 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் பர்கர் ரோடு, பலாங்கீர், டிட்லாகர், கேசிங்கா, முனிகுடா, ராயகடா, பார்வதிபுரம், பப்பிலி, விஜயநகரம், கொத்தவலசா, துவ்வாடா, அனகாப்பள்ளி, சமல்கோட், ராஜமகேந்திரவரம், ராஜமுந்திரி, பீமவரம் டவுன், கைகலூர், குடிவாடா, விஜயவாடா, தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com