ஹூப்பள்ளி - ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

ஹூப்பள்ளி -ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஹூப்பள்ளி - ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

கோடை கால விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக ஹூப்பள்ளி -ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஹூப்பள்ளி -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07355) அடுத்த மாதம் (ஏப்ரல்) 5, 12, 19, 26 மற்றும் மே 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை களில்) ஹூப்பள்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக ராமேசுவரம் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07356) வருகிற ஏப்ரல் 6,13,20,27 மற்றும் மே 4,11,18,25, ஜீன் 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்பள்ளியை சென்றடையும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com