

சேலம்,
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், உத்தரபிர தேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இருந்து நெல்லைக்கு சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிரயாக்ராஜ்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-04171) இன்று (சனிக்கி ழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை சனிக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 10.20 மணிக்கு பிரயாக்ராஜ் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காட்பாடி, ஜோலார் பேட்டை வழியாக திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்த டையும். பின்னர் 4.40 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மதியம் 1.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நெல்லை-பிரயாக்ராஜ் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-04172) வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை திங் கட்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு நெல் லையில் இருந்து புறப்பட்டு, கரூர், நாமக்கல் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 6.40 மணிக்கு புறப் பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்று வியாழக்கிழமை அதி காலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2-ம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான வசதியுடன் கூடிய சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் உள்ளன. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.