

சென்னை,
சென்னை தாம்பரம் - மேற்கு வங்காள மாநில ஹவுரா அருகே உள்ள சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை (14-ந் தேதி), 21 மற்றும் 28-ந் தேதிகளில் (செவ்வாய்கிழமை) காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06075) மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து நாளை மறுநாள் (15-ந் தேதி), 22 மற்றும் 29-ந் தேதிகளில் (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06076), 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயிலில் 16 தூங்கும் வசதி பெட்டிகளும், 2 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (13-ந் தேதி) மதியம் 2 மணிக்கு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.