தாம்பரம் - தென்காசி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - தென்காசி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தாம்பரத்தில் இருந்து தென்காசி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06135) நாளை (வியாழக்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11 மணிக்கு தென்காசி சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான மின்பதிவு இன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கியது.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06136) வருகிற 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com