திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறையை ஒட்டி திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை விடுமுறையை ஒட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06031) வரும் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06032) வருகிற 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பகல் 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு வருகிற 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com