

திருப்பூர்,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று மாலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 11.23 மணிக்கு திருப்பூருக்கும் வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதுபோல் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து 22-ந் தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.38 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றுசேரும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.