

திருப்பூர்,
சபரிமலை சீசனை முன்னிட்டு சேலம், ஈரோடு. திருப்பூர் வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி-கொல்லம் (வண்டி எண். 07195) வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜனவரி 17-ந்தேதி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு இரவு 10.03 மணிக்கு வந்து 10.05 மணிக்கு புறப்படும். கொல்லம்-சார்லப்பள்ளி (07196) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் காலை 10.55 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.18 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.