

திருப்பூர்,
சபரிமலை சீசனை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, காக்கிநாடா டவுன்-கொல்லம் (வண்டி எண்.07233) வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற ஜனவரி 21-ந்தேதி வரை (10 சேவைகள்) வியாழக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு காக்கிநாடா டவுனில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 10.28 மணிக்கு வந்து 10.30 மணிக்கு புறப்படும். கொல்லம்-காக்கிநாடா டவுன் (07234) வாராந்திர சிறப்பு ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் ஜனவரி 23-ந்தேதி வரை (10 சேவைகள்) சனிக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் மதியம் 12.08 மணிக்கு வந்து 12.10 மணிக்கு புறப்படும்.
மசிலிப்பட்டினம்-கொல்லம் (07231) சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 27-ந்தேதி மசிலிப்பட்டினத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் காலை 10.28 மணிக்கு வந்து 10.30 மணிக்கு புறப்படும். கொல்லம்-மசிலிப்பட்டினம் (07232) சிறப்பு ரெயில் வருகிற 22 மற்றும் 29-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கொல்லத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 8.50 மணிக்கு மசிலிப்பட்டினம் சென்றடை யும். இந்த ரெயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.15 மணிக்கு வந்து 12.17 மணிக்கு புறப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.