டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி
Published on

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இலவச பயிற்சி

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-1 பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 மற்றும் இதரபிரிவினருக்கு 39. இத்தேர்வு நடைபெறும் நாள் 30.10.2022 ஆகும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலைநாடுநர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுநர்கள் 240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து மத்திய, மாநில அரசினால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com