அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

குருவிகுளம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
Published on

திருவேங்கடம்:

குருவிகுளம் கோ.நா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் வினோத் முன்னிலையில் மேல்நிலைக் கல்வி முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மற்றும் உலக அளவில் நடந்த விஷயங்களை அறிந்து கொள்ளவும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் ஏதுவாக மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் வாசிப்பு இயக்கத்தின் முன்னோடியாக செய்தித்தாள் வாசிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சுப்பாராஜூ செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com