ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக மதுரை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள்

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக மதுரை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள்
Published on: 

மதுரை,

சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் மதுரை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நான்தெட்-கொல்லம்

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, மராட்டிய மாநிலம் நான்தெட் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்லத்துக்கு ஒரு சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 11-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து நான்தெட் ரெயில் நிலையத்திற்கு அடுத்த மாதம் 9-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 13-ந் தேதி வரை ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07687) நான்தெட் ரெயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 1.15 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07688) கொல்லத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 3.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வியாழக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு நான்தெட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. ரெயிலில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப் பட்ட பெட்டி, 7 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தாங்கும் வசதி பெட்டிகள். 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

X