

சென்னை,
பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சார்லபள்ளி - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் இயக்கப்படுகின்றன.
தெற்கு மத்திய ரெயில்வே சார்பில், பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், “தேவைப்படும் போது இயக்கப்படும்” (Trains on Demand) சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சார்லபள்ளி - திருவண்ணாமலை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 07003) அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சார்லபள்ளியில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலை - சார்லபள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 07004) அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.