

சூரமங்கலம்,
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, போத்தனூர்-பரவுனி சிறப்பு ரெயில் (06139) நாளை (வெள்ளிக்கிழமை) போத்தனூரில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 9 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக 18-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், பரவுனி-போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டிஎண்06140) வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்படுகிறது. காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 21-ந் தேதி மதியம் 2 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.30 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.
திருவனந்தபுரம் வடக்கு-சந்திரகாச்சி சிறப்பு ரெயில் (06105), இன்று (வியாழக்கிழமை) திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 2 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, ஜோலார் பேட்டை, காட்பாடி வழியாக நாளை மறுநாள் மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சி சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சி-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06106) வருகிற 18-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 19-ந் தேதி இரவு 9.25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர். போத்தனூர் வழியாக 20-ந் தேதி காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.