சென்னையில் 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது

சென்னை தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் 05.12.2026 (சனிக்கிழமை) மற்றும் 06.12.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
சென்னையில் 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Published on: 

சென்னை,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (29.11.2026) நடைபெற்றது.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 7701

இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை தேர்தல் மாவட்டத்தில் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களில், பதினாறு சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 7701.

விண்ணப்பங்களின் விவரம்

· படிவம் 6 - புதிய வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 4906. இவ்விண்ணப்பங்களில் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) பிரிவில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 1571.

· படிவம் 7 - பெயர் சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 154.

· படிவம் 8 - குடியிருப்பு இடமாற்றம், வாக்காளர் பட்டியல் விவரத் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை , மாற்றுத்திறனாளி விவரக் குறியீடு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 2641.

சட்டமன்ற தொகுதி வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்:

• எண். 11 - டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்: படிவம் 6-ல் 286 விண்ணப்பங்களும், படிவம் 7-ல் 2 விண்ணப்பங்களும், படிவம் 8-ல் 179 விண்ணப்பங்களும் என மொத்தம் 467 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 12 - பெரம்பூர்: படிவம் 6-ல் 354, படிவம் 7-ல் 4 மற்றும் படிவம் 8-ல் 213 என மொத்தம் 571 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 13 - கொளத்தூர்: அதிகபட்சமாக படிவம் 6-ல் 645, படிவம் 7-ல் 19 மற்றும் படிவம் 8-ல் 313 என மொத்தம் 977 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 14 - வில்லிவாக்கம்: படிவம் 6-ல் 366, படிவம் 7-ல் 6 மற்றும் படிவம் 8-ல் 159 என மொத்தம் 531 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

• எண். 15 - திரு.வி.க. நகர் (தனி): படிவம் 6-ல் 557, படிவம் 7-ல் 69 மற்றும் படிவம் 8-ல் 247 என மொத்தம் 873 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 16 - எழும்பூர் (தனி): படிவம் 6-ல் 318, படிவம் 7-ல் 2 மற்றும் படிவம் 8-ல் 87 என மொத்தம் 407 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 17 - இராயபுரம்: படிவம் 6-ல் 277, படிவம் 7-ல் 21 மற்றும் படிவம் 8-ல் 143 என மொத்தம் 441 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 18 - துறைமுகம்: படிவம் 6-ல் 281 மற்றும் படிவம் 8-ல் 135 என மொத்தம் 416 விண்ணப்பங்கள் வந்துள்ளன (படிவம் 7-ல் விண்ணப்பங்கள் எதுவும் இல்லை).

• எண். 19 - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: படிவம் 6-ல் 217, படிவம் 7-ல் 8 மற்றும் படிவம் 8-ல் 197 என மொத்தம் 422 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 20 - ஆயிரம் விளக்கு: படிவம் 6-ல் 255 மற்றும் படிவம் 8-ல் 106 என மொத்தம் 361 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன (படிவம் 7-ல் விண்ணப்பங்கள் இல்லை).

• எண். 21 - அண்ணா நகர்: படிவம் 6-ல் 269, படிவம் 7-ல் 5 மற்றும் படிவம் 8-ல் 184 என மொத்தம் 458 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 22 - விருகம்பாக்கம்: படிவம் 6-ல் 303 மற்றும் படிவம் 8-ல் 167 என மொத்தம் 470 விண்ணப்பங்கள் வந்துள்ளன (படிவம் 7-ல் விண்ணப்பங்கள் இல்லை).

• எண். 23 - சைதாப்பேட்டை: படிவம் 6-ல் 172, படிவம் 7-ல் 5 மற்றும் படிவம் 8-ல் 115 என மொத்தம் 292 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 24 - தியாகராயநகர்: படிவம் 6-ல் 241, படிவம் 7-ல் 8 மற்றும் படிவம் 8-ல் 164 என மொத்தம் 413 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 25 - மயிலாப்பூர்: படிவம் 6-ல் 210 மற்றும் படிவம் 8-ல் 110 என மொத்தம் 320 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன (படிவம் 7-ல் விண்ணப்பங்கள் இல்லை).

• எண். 26 - வேளச்சேரி: படிவம் 6-ல் 155, படிவம் 7-ல் 5 மற்றும் படிவம் 8-ல் 122 என மொத்தம் 282 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஒட்டுமொத்த நிலவரம்

இந்த 16 தொகுதிகளிலும் சேர்த்துப் படிவம் 6-ன் கீழ் 4,906 விண்ணப்பங்களும், படிவம் 7-ன் கீழ் 154 விண்ணப்பங்களும், படிவம் 8-ன் கீழ் 2,641 விண்ணப்பங்களும் என ஆக மொத்தம் 7,701 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்று சிறப்பு முகாம்களிலும் பெறப்பட்ட விண்ணப்பங்கள்

ஏற்கெனவே 21.11.2026 அன்று நடைபெற்ற முதல் சிறப்பு முகாமில் 1698 விண்ணப்பங்களும், 22.11.2026 அன்று நடைபெற்ற இரண்டாம் சிறப்பு முகாமில் 6804 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இன்றைய முகாமில் பெறப்பட்ட 7701 விண்ணப்பங்களையும் சேர்த்து, மூன்று சிறப்பு முகாம்களிலும் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 16203 அதன் விவரம் பின்வருமாறு:-

சட்டமன்றத் தொகுதி முகாம் I முகாம் II முகாம் III மொத்தம்

• எண். 11 - டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்: முதல் முகாமில் (21.11.2026) 118 விண்ணப்பங்களும், இரண்டாம் முகாமில் (22.11.2026) 549 விண்ணப்பங்களும், மூன்றாம் முகாமில் (29.11.2026) 467 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,134 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 12 - பெரம்பூர்: முதல் முகாமில் 134, இரண்டாம் முகாமில் 617 மற்றும் மூன்றாம் முகாமில் 571 என மொத்தம் 1,322 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 13 - கொளத்தூர்: அதிகபட்சமாக முதல் முகாமில் 179, இரண்டாம் முகாமில் 818 மற்றும் மூன்றாம் முகாமில் 977 என மொத்தம் 1,974 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 14 - வில்லிவாக்கம்: முதல் முகாமில் 142, இரண்டாம் முகாமில் 539 மற்றும் மூன்றாம் முகாமில் 531 என மொத்தம் 1,212 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

• எண். 15 - திரு.வி.க. நகர் (தனி): முதல் முகாமில் 155, இரண்டாம் முகாமில் 180 மற்றும் மூன்றாம் முகாமில் 873 என மொத்தம் 1,208 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 16 - எழும்பூர் (தனி): முதல் முகாமில் 66, இரண்டாம் முகாமில் 370 மற்றும் மூன்றாம் முகாமில் 407 என மொத்தம் 843 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 17 - ராயபுரம்: முதல் முகாமில் 57, இரண்டாம் முகாமில் 314 மற்றும் மூன்றாம் முகாமில் 441 என மொத்தம் 812 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 18 - துறைமுகம்: முதல் முகாமில் 58, இரண்டாம் முகாமில் 328 மற்றும் மூன்றாம் முகாமில் 416 என மொத்தம் 802 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

• எண். 19 - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முதல் முகாமில் 88, இரண்டாம் முகாமில் 290 மற்றும் மூன்றாம் முகாமில் 422 என மொத்தம் 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 20 - ஆயிரம் விளக்கு: முதல் முகாமில் 101, இரண்டாம் முகாமில் 324 மற்றும் மூன்றாம் முகாமில் 361 என மொத்தம் 786 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 21 - அண்ணா நகர்: முதல் முகாமில் 129, இரண்டாம் முகாமில் 331 மற்றும் மூன்றாம் முகாமில் 458 என மொத்தம் 918 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 22 - விருகம்பாக்கம்: முதல் முகாமில் 131, இரண்டாம் முகாமில் 612 மற்றும் மூன்றாம் முகாமில் 470 என மொத்தம் 1,213 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

• எண். 23 - சைதாப்பேட்டை: முதல் முகாமில் 121, இரண்டாம் முகாமில் 398 மற்றும் மூன்றாம் முகாமில் 292 என மொத்தம் 811 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 24 - தியாகராயநகர்: முதல் முகாமில் 63, இரண்டாம் முகாமில் 330 மற்றும் மூன்றாம் முகாமில் 413 என மொத்தம் 806 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

• எண். 25 - மயிலாப்பூர்: முதல் முகாமில் 55, இரண்டாம் முகாமில் 388 மற்றும் மூன்றாம் முகாமில் 320 என மொத்தம் 763 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• எண். 26 - வேளச்சேரி: முதல் முகாமில் 101, இரண்டாம் முகாமில் 416 மற்றும் மூன்றாம் முகாமில் 282 என மொத்தம் 799 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஒட்டுமொத்த நிலவரம்

இந்த 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து, முதல் முகாமில் (21.11.2026) 1,698 விண்ணப்பங்களும், இரண்டாம் முகாமில் (22.11.2026) 6,804 விண்ணப்பங்களும், மூன்றாம் முகாமில் (29.11.2026) 7,701 விண்ணப்பங்களும் என மூன்று முகாம்களிலும் சேர்த்து ஆக மொத்தம் 16,203 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் 28-11-2026(சனிக்கிழமை) அன்று வரையில் இணையவழியில் பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 12215. மேற்படி சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சரிபார்ப்பு மற்றும் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 5, 6 தேதிகளில் சிறப்பு முகாம்கள்

மேலும், இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி சென்னை தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் 05.12.2026 (சனிக்கிழமை) மற்றும் 06.12.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது, பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X