மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் பத்திரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com