

சின்னதாராபுரம் அருகே புஞ்சைகாளி குறிச்சியில் பிரசித்தி பெற்ற உறியடி வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் சிலை வைத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அப்போது இந்த பகுதியை ஆண்ட ராணி மங்கம்மாள் கோவிலை கட்டி சாமி தரிசனம் செய்து வந்தார்.
தற்போது கோவில் புதுபிக்கபட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மூலவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இங்கு புதிதாக அமைய உள்ள கொடி மரத்திற்கு பக்தர்கள் எண்ணெய் ஊற்றி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.