விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, கடைவீதியில் தேரடியில் உள்ள விநாயகர் கோவில், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவில், பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் உள்ள மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், வடக்குமாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை வெற்றி விநாயகர், வெங்கடேசபுரம் ஆதி சக்தி விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, நான்கு ரோடு அருகே மின்வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில், தீரன் நகரில் உள்ள விநாயகர் கோவில், துறைமங்கலம் சொக்கநாதர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி ஆகியவற்றில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அங்குள்ள மூலவர் விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த சங்கடஹர சதுர்த்தி நவம்பர் மாதம் 1-ந்தேதி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com