கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com