ராமேசுவரம் சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜை

ராமேசுவரம் சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜை
ராமேசுவரம் சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜை
Published on

ராமேசுவரம்

ஆதிசங்கரரின் 2532-வது ஜெயந்தியை முன்னிட்டு ராமேசுவரம் சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆதிசங்கரர் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியாரின் உருவ சிலைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் சங்கரமடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தர், நிர்வாகி ஆனந்த பத்மநாபசர்மா, முன்னாள் கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன், கம்பன் கழக நிர்வாகி நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இலக்கிய பேச்சாளர் ராதாகிருஷ்ணன் மாது தலைமையில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com