கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
Published on

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. போட்டிக்கு தி.மு.க. மாநில பொறியாளர் அணியின் துணை செயலாளர் பரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.

போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆாவத்துடன் கலந்து கொண்டு தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறைய உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன் மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் ஆகிய தலைப்புகளில் பேசினர். போட்டியில் முதலிடம் பிடித்த பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவி ஹரிணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்த கல்பாடியை சேர்ந்த மாணவர் வெங்கடேசுக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்த கல்பாடி எறையூரை சேர்ந்த மாணவர் ராமமூர்த்தி ரூ.3 ஆயிரமும் மற்றும் கேடயம், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த மாணவி ஹரிணி மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com