பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
Published on

கூடலூர்

கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கொம்மு ஒம்காரம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் பந்தலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பந்தலூர், தேவாலா பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தலூர் வனச்சரகர் சஞ்சீவி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி, ஓவேலி வனச்சரகர் யுவராஜ் குமார், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com