அதிவேகமாக வந்த கார் மீன் கடையில் மோதி விபத்து: சிறுவன் பலி, 3 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மீன் கடைக்குள் புகுந்தது.
விபத்து
Published on: 

திருச்சி,

அதிவேகமாக வந்த கார் மீன் கடையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் மோதி விபத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செக்கனம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 16). இவர் கருங்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் கடை ஒன்றை நடத்தி வந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த ஜான்சனின் மீன் கடைக்குள் புகுந்தது.

இதில், ஜான்சன் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அருகிலுள்ள பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ஜான்சன் உயிரிழந்தார்.

மேலும், கடையில் மீன் வாங்க வந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com