எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன வருமான வரிசோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனையில் ரூ.100 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. #Incometax #SPKConstruction
எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன வருமான வரிசோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்
Published on

சென்னை

தமிழகத்தில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகள் இன்று சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுனத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி பணம் மற்றும் 80 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடப்பதால், சோதனை நிறைவுற்ற பிறகே, முழு விவரமும் வெளியாகும்.

சென்னை, அருப்புக்கோட்டையில் காலையில் இருந்து தொடர்ந்து வருமான வரி சோதனை நீடித்து வருகிறது.

முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com