தர்மபுரியில், மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரியில், மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தர்மபுரியில், மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Published on

தர்மபுரி மாவட்ட தடகள கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளை மாவட்ட தடகள கழக செயலாளர் அறிவு தொடங்கி வைத்தார். துணைத்தலைவர்கள் பெப்சி வெங்கடேசன், இளங்கோ, பொருளாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. 16 வயதுக்குட்பட்டோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100, 300, 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெரும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 13-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தர்மபுரி மாவட்ட தடகள கழக செயலாளர் அறிவு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com